வியாழன், 5 டிசம்பர், 2013

வீட்டுத்தோட்டத்தில் திராட்ச்சை 


திராட்ச்சைப் பழ சீசன் யாழ்ப்பணத்தில தொடங்கினால் பஸ் ஸ்டாண்ட் , கோயில்கள், சந்தை எண்டு எல்லா இடத்திலும் குவித்து வைத்து விற்பனை செய்வார்கள். வாங்கலாம் எண்டு கிட்டப்போனால் திராட்சைக்கே என்று இயற்கையாக இருக்கும் வாசனையை விட கிருமி நாசினி வாடை தான் அதிகமாக இருக்கும். எவ்வளவு தரம் கழுவினாலும் மனசுக்குள் ஒரு பயம் தான். போன வருடம் தான் மனசுக்குள் ஒரு ஐடியா வீட்டுத்தோட்டத்தில் மரக்கறி மட்டும் தான் செய்யவேணுமெண்டு இல்லைதானே!! பேசாமல் திரட்ச்சைக்கொடி ஒண்டு நட்டு பார்ப்போம் எண்டு உரும்பிராயில  ஒருத்தரிடம் நாலு பதி வாங்கிவந்து வீட்டுக்கு முன்னால் நட்டாச்சு. ஒரு வருடத்துக்கு பிறகு நட்ட கொடிகள் காய்க்க தொடக்கி விட்டன. இந்த முறை சீசனுக்கு எங்கட வீட்டுத்தோட்டத்தில பறிச்ச, முற்று முழுதாக இயற்கை முறையில் விளைந்த திராட்ச்சை பழங்கள் தான்!!!
துளிர்க்கும் கொடி


மிளகு அளவில் இருக்கும் பிஞ்சுகள்

நீல நிறத்தில் பொலித்தீன் பைகளை கட்டி விடுவதால் அணில் குருவிகளிடம் இருந்து பழங்களை பாதுகாப்பதுடன் பழங்களின் அளவையும் கூட்டலாம்

பழத்தை சுவைக்கும் மகன்

பழத்தை சுவைக்கும் மகள்